Wednesday, July 30, 2008

தொடர் குண்டு வெடிப்புகள்: த.மு.மு.க கடும் கண்டனம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை
பெங்களூர், அஹமதாபாத் உள் ளிட்ட நகரங்களில் நடந்துள்ள தொடர் குண்டு வெடிப்புகளை த.மு.மு.க வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்தக் கொடுஞ்செயலில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப் பட்டு, கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதிலும், ஆட்சியைக் காப்பாற்றுவதிலும் மத்திய அரசு காட்டிய அக்கறையை உள்நாட்டுப்பாது காப்பில் காட்டவில்லை என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

மத்திய அரசு உள்நாட்டுப் பாதுகாப்பில் உரிய அக்கறை செலுத்த வேண்டும். மனித நேயமுள்ள எவராலும் சகிக்க முடியாத இந்த பயங்கரவாத செயல்களைப் பயன்படுத்தி முஸ்லிம் சமுதாயத்தின் மீது வெறுப்பு வளர்க்கும் வகையில் சில ஊடகங்கள் செயல் படுவது கவலைக்குரியது.

செய்தி ஊடகங்கள் இதுபோன்ற சமயங்களில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

நாட்டின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் பயங்கரவாத சக்தி களுக்கு பாடம் கற்பிக்கும் வகையில், அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

No comments: